எஸ்கே23 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!
madharasi movie release date announce
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான 'மதராஸி' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

இதற்கிடையே சிவகார்த்திகேயனின் 40-வது பிறந்த நாளை முன்னிட்டு 'எஸ்கே23' படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு தமிழில் 'மதராஸி' என்றும் இந்தியில் 'தில் மதராஸி' எ தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், 'மதராஸி' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதே தேதியில் தான் கடந்த ஆண்டு விஜய் நடித்த 'தி கோட்' திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
English Summary
madharasi movie release date announce