மீண்டும் வைரலான நடிகை... மகிழ்ச்சியில் பிரியா வாரியர்...!!! - 'தொட்டு தொட்டு பேசும் சுல்தான்...' GBU
Actress goes viral again Priya Varrier happy Sultan song GBU
கடந்த 10-ந் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க 'அஜித்குமார்' நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் அர்ஜுன் தாஸ், திரிஷா, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் மீது வைத்த பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் மலையாள நடிகையான 'பிரியா வாரியர்', அர்ஜுன் தாஸின் காதலியாக நடித்தார். ஆனால் இதில் பிரியா வாரியருக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், அர்ஜுன் தாஸூடன் 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடலுக்கு அவர் நடனம் ஆடியது ரசிகர்கள் மட்டுமல்லாது, சமூக வலைதளங்களிலும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
பிரியா வாரியர்:
இதனிடையே, ஐதராபாத்தில் நடந்த 'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடிகை பிரியா கலந்து கொண்டு உரையாடினார். அதில் அவர் கூறியதாவது, "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதனை நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை.
என்னுடைய போனுக்கு தொடர்ந்து வாழ்த்து மடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதாவது, 2018-ம் ஆண்டு வெளியான 'அடார் லவ்' படத்தில் நான் வைரலானது போல, மீண்டும் வைரல் ஆகிவிட்டேன் என்று என்னிடம் சொல்கிறார்கள்.அதுவும் சிம்ரன் மேம் ஆடிய 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடலுக்கு, நான் சரியான பங்களிப்பை கொடுப்பேன் என்று நம்பிய இயக்குனர் ஆதிக் சாருக்கு நன்றி.
நான் அஜித் சாரின் தீவிர ரசிகராக மாறிவிட்டேன். அவ்வளவு உறுதுணையாக இருந்தார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன" எனத் தெரிவித்தார்.இது ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
English Summary
Actress goes viral again Priya Varrier happy Sultan song GBU