Its a wrap - பிரதீப் ரங்கநாதனின் 'LIK' படப்பிடிப்பு பணி நிறைவு...
Its a wrap Pradeep Ranganathan LIK shooting completes
பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் ''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK), முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

இப்படத்தில்,கீர்த்தி செட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் 'LIK' படத்தின் படப்பிடிப்பு கடைசி காட்சிகள் எடுக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
English Summary
Its a wrap Pradeep Ranganathan LIK shooting completes