டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானதன் 113வது ஆண்டு நினைவு தினம்! - Seithipunal
Seithipunal


பனிப் பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானதன் 113வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அமெரிக்கா, இங்கிலாந்து மட்டுமின்றி நடுக்கடலிலும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை சேர்ந்த ‘ஒயிட் ஸ்டார் லைன்’ நிறுவனம் மாபெரும் சொகுசு கப்பலை உருவாக்கியது. அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் உள்ள ஹார்லேண்ட் அண்ட் உல்ப் கட்டும் தளத்தில் ‘டைட்டானிக்’ கட்டும் பணி 1909ல் துவக்கப்பட்டு 1911ல் நிறைவடைந்தது. முதலாவது பிரமாண்ட சொகுசு கப்பல் என்ற வகையில் உலகையே வியக்க வைத்த டைட்டானிக் தனது முதல் பயணத்தை இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் துறைமுகத்தில் இருந்து 1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி துவக்கியது. பல நாடுகளை சேர்ந்த கோடீஸ்வரர்கள், மிடில் கிளாஸ் மக்கள், கப்பல் ஊழியர்கள், தொழிலாளர்கள் என மொத்தம் 2,223 பேர் கப்பலில் இருந்தனர். சவுத் ஆம்டனில் 922 பயணிகளுடன்தான் புறப்பட்டது. மற்றவர்கள் செர்பர்க் மற்றும் குயின்ஸ் டவுனில் ஏறிக்கொண்டனர். தெற்கு அயர்லாந்தின் கார்க் துறைமுகத்தில் இருந்து அட்லான்டிக் கடலில் பயணத்தை துவக்கியது டைட்டானிக்.சௌதாம்டனிலிருந்து நியூ யார்க் நகருக்கு தனது கன்னிப் பயணத்தைத் தொடங்கிய இக்கப்பல் கடலில் மூழ்கிய போது 1,500-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

"டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து பல அடிப்படைக் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.கடல் இயல்பாகவே டைட்டானிக் கப்பலை மெதுவாக அழித்து வருகிறது. ஏராளமான நுண்ணுயிர்கள் கப்பலை அரித்துக்கொண்டுள்ளன. சில பாகங்கள் உருக்குலைந்து, தமது உருவங்களை இழந்து வருகின்றன. டைட்டானிக் குறித்து இன்னும் வெளிவராத பல விவரங்கள் வெளியாகும் என்பதே அனைவரது நம்பிக்கையாக உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

113th Anniversary of Titanic Tragedy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->