தங்கலான் படம் ஓடிடியில் வெளியிட தடை இல்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடித்த தங்கலான் திரைப்படம், இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று திரையரங்குகளில் வெளியானது.

மேலும், இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில்,  ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்னதாக கோலார் தங்கச் சுரங்கத்தில்  மக்கள் சந்தித்த பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகளவில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுது. அதுமட்டுமல்லாமல்  தங்கலான் படம் உலகம் முழுவதும் 53 கோடியே 64 லட்சம் ரூபாய் வசூலித்து உள்ளதாக விசேஷ போஸ்டர் ஒன்றும் வெளியிட்டு படக்குழு தெரிவித்தது.

இந்த நிலையில், இந்த படத்தில் வைணவர்களை அவமதிக்கும் காட்சி இருப்பதாக கூறி, இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொற்கொடி என்பவர் வழக்கு தொடர்ந்த நிலையில், ஓடிடியில் வெளியிட தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There is no ban on release of thangalaan movie in ott madras high court action verdict


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->