துணிவு ‘சில்லா சில்லா’ பாடல்களுக்கு குட்டிஸ் போட்ட அசத்தல் ஆட்டம்! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குநர் வினோத் இயக்கத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'துணிவு'. 

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள இந்த படம், பஞ்சாப் மாநிலத்தில் நடந்த வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். படத்தின் முக்கிய வேடத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். 

இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதற்கிடையே, துணிவு படத்தின் ‘சில்லா சில்லா’ என்ற பாடல் கடந்த டிச. 9 ஆம் தேதி வெளியானது. 

இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் வெளியானதை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி தீர்க்கின்றனர்.

பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் உலகம் அதிகம் பார்க்கப்பட்ட விடியோ என்ற சாதனையையும் படைத்துள்ளது. தற்போது 1.5 கோடி (13 மில்லியன்) பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சிறுமி ஒருவரும், சிறுவன் ஒருவனும் இந்தப் பாடலுக்கு ஆடிய காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thunivu Chilla Chilla song baby dance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->