படத்தில் இந்த ஹீரோயின் இல்லையா???படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய தளபதி! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது  இவரது நடிப்பில் லியோ திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் திருமலை,

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த  விஜய்க்கு திருமலை படத்தின் வெற்றி மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது. திருமலை படத்திற்கு பிறகு விஜய் நடித்த திருப்பாச்சி, மதுர, சிவகாசி என அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. விஜய் மார்க்கெட்டை உயர்த்தியதில்  திருமலை திரைப்படம்  முக்கிய இடம் வகிக்கிறது.

இந்தத் திரைப்படத்தை ரமணா இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் தளபதி விஜயுடன், விவேக், ஜோதிகா,  ரகுவரன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் வந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு  திரைப்படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

இத்திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் கதாநாயகி ஜோதிகா இல்லையாம். தெலுங்கு பட நாயகி என நர்மதா என்பவர் தான் முதலில் கமிட்டாகி இருந்தாராம். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் மனைவி. நர்மதா எவ்வளவுதான் நன்றாக நடித்தாலும்  டைரக்டருக்கு திருப்தியாக இல்லாததால் அவரை நீக்கி விட்டு ஜோதிகாவை நடிக்க வைத்திருக்கிறார். இந்தத் தகவலை விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரிடம் கூறிய இயக்குனர் விஜயிடம் கூற மறந்து விட்டாராம்‌ மறுநாள் படப்பிடிப்பிற்கு வந்த விஜய்  க்ஷஇந்த சம்பவத்தை கேள்விப்பட்டு கோபமாக செட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து தான் மீண்டும் படப்பிடிப்பிற்கு வந்தாராம். தற்போது இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirumalai movie director shares an interesting news about a shooting spot incdent


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->