மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் - திருநங்கைகள் பரபரப்பு புகார்.! - Seithipunal
Seithipunal


மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் - திருநங்கைகள் பரபரப்பு புகார்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ள "மாமா ஆன்டி" என்ற கதாபாத்திரம் திருநங்கைகளை இழிவுபடுத்துவதாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கைகள் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில், "திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மார்க் ஆண்டனி படத்தில் திருநங்கைகளை பாலியல் உறவுக்கு அலைபவர்களாகவும், வன்முறையால் அடித்து வீழ்த்த வேண்டும் எனவும் பொருள்படும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனால் திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கிடையே, திருநங்கைகள் மீது வன்முறையை ஏவ வேண்டும் என்ற கருத்து மேலோங்கும். ஆகவே, இந்தத் திரைப்படத்தில் வரும் திருநங்கைகள் தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் அல்லது ஒட்டுமொத்த படத்தையே தடை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

transgender petition against mark antony movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->