விஜய்யை அடுத்து களத்தில் இறங்கிய ''நடிகர் பிரசாந்த்'': வைரல் புகைப்படங்கள்! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து கிராமங்கள் தீவுகளாக காட்சியளித்தன. 

லட்சக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு மக்கள் முகாம்களில் தங்கவைத்தனர். 

தமிழக அரசு சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்டது.

பாதிக்கப்படும் மக்களுக்கு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், நடிகர்கள் என பலரும் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் பிரசாந்த் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tuticorin actor Prasanth gave relief fund


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->