பாகிஸ்தானில் சர்வாதிகாரத்தை திணிக்க திட்டம்: இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்வீரரும்  முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு 2024 பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இம்ரான் கான் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் மெஜாரிட்டி பெறவில்லை.இருந்தபோதும்  தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக  இம்ரான் கான் குற்றம்சாட்டினார்.

தேர்தலில் முறைகேடு தொடர்பாக அவருடைய கட்சி தொண்டர்கள், தலைவர்கள் தொடர்ந்து போராடு வருகின்றனர். இதற்கிடையே பாகிஸ்தானில் நிலவும் அரசியல் பதற்றத்தை குறைக்க இம்ரான் கான் கட்சியுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் 10 வருடத்திற்கு சர்வாதிகார ஆட்சியை திணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக  இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இம்ரான் கான் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-பாகிஸ்தானில் 10 வருடத்திற்கு சர்வாதிகாரத்தை திணிக்க திட்டமிட்டுள்ளனர் என்றும்  அதில் இரண்டு வருடங்கள் ஏற்கனவே கடந்து போய்விட்டன என்று குறிப்பிட்டுள்ள  இம்ரான் கான்எங்களுக்கு எதிராக அடக்குமுறையை கையாளும் நீதிபதிகள் அல்லது போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு என்ற வெகுமதி வழங்கப்படுகிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ள இம்ரான் கான்:எனக்கு எதிராக சட்டவிரோத தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹமாயுன் திலாவர் பதவி உயர்வு பெற்றுள்ளார்என்றும்  ராவல் பிண்டி மற்றும் சர்கோடா நீதிபதிகள் எனக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதால், நீக்கப்பட்டுள்ள்ளனர் என குற்றம்சாட்டிய இம்ரான் கான் இதுபோன்ற செயல்கள் நாட்டின் தகுதியையும் சட்டத்தின் ஆட்சியையும் அழித்துவிட்டன.இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Imran Khan accuses Pakistan of planning to impose dictatorship


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->