பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி படிப்பு தரமாக இருக்க வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி.! - Seithipunal
Seithipunal


புதிய கல்விக் கொள்கை பற்றி பலருக்கு விழிப்புணர்வு இல்லை என்று ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வேலூரில் நடைபெற்ற தென் மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசியதாவது;-

"பிரிட்டிஷர்கள் இந்தியா வந்த பிறகு நம்முடைய கல்வி முறையை மாற்றிவிட்டார்கள். அதை நாம் தற்போது மீட்டெடுக்க வேண்டும். அப்போதைய காலத்தில் அரசர்கள் கல்வியில் தலையிடவில்லை. குருகுல கல்வியில் ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கலந்துரையாடினார்கள். புரிதலும் இருந்தது. 

அதன் மூலம் ஆசிரியர்களும் மாணவர்களும் அறிவை வளர்த்துக் கொண்டார்கள். இந்தியாவில் உள்ள பழைய கல்வி முறையில் மாற்றம் கொண்டு வருவது தான் புதிய கல்விக் கொள்கை. புதிய கல்விக் கொள்கை பற்றி பலருக்கு விழிப்புணர்வும், பெரிதாக புரிதலும் இல்லை. 

மாநிலங்களில் கல்வி ஆரோக்கியமாக இல்லை. பிரதமர் மோடி கல்வியை பரவலாக்க விரும்புகிறார். பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி படிப்பு தரமாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

governor rn ravi speech about new education system


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->