பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் அறிமுகமாகும் "வா வரலாம் வா" திரைப்படத்தின் விறுவிறுப்பான படப்பிடிப்பு! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் "வா வரலாம் வா" திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

எஸ்ஜிஎஸ் கிரியேட்டிவ் மீடியா தயாரிப்பில், எல்.ஜி. ரவிசந்தர் - எஸ்பிஆர் இணைந்து இயக்கும் "வா வரலாம் வா" திரைப்படத்தின் படப்பிடிப்பு, செங்கல்பட்டு மாவட்டம், வேடவாக்கம் கிராமத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்தப் படத்தில் கிங்ஸ்லீ, மைம் கோபி, பவ்யா, காயத்ரி, சிங்கம்புலி, சரவணன் சுப்பையா, தீபா, வையாபுரி, பயில்வான் ரங்கநாதன், மீசை ராஜேந்திரநாத், திலீபன், ரஞ்சன், கிரேன் மனோகர், போண்டா மணி, பிரபாகரன், ராமசாமி, வாசு விக்ரம் என பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு தேவா இசையமைக்க, பாடல்களை காதல் மதி, கானா எட்வின்  எழுதியுள்ளனர். தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்க, கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். 

படத்தின் படப்பிடிப்பு சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், வேடவாக்கம், வேடந்தாங்கல் போன்ற இடங்களில் ஒரே கட்டமாக நடந்து வருகிறது.

படப்பிடிப்பு குறித்த புகைப்படங்களை இயக்குனர் எஸ்.பி.ஆர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் சரவணன் சுப்பையா நடிக்கும் காட்சிகளை, இயக்குனர் எஸ்.பி.ஆர் இயக்குவது இடம்பெற்றுள்ளது.

பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் "வா வரலாம் வா" திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Va Varalam Va Movie Shooting Spot 1


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->