Va Varalam Va | நண்பனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்.பி.ஆர்.!! இசை வெளியீட்டு விழாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!! - Seithipunal
Seithipunal


தேனிசை தென்றல் தேவாவின் இசையில், எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்பிஆர் தயாரிப்பில் "வா வரலாம் வா திரைப்படத்தை தயாரிப்பாளர் எஸ்பிஆர் மற்றும் இயக்குநர் எல்.ஜி. ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார். கதாநாயகனாக பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், நாயகியாக மஹானா சஞ்சீவி, வில்லனாக "மைம்" கோபி, முக்கிய கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லீ, காயத்ரி ரெமா நடித்துள்ளார்.

மேலும், இயக்குநர்கள் சிங்கம்புலி, சரவண சுப்பையா, நடிகை தீபா, நடிகர்கள் வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் 40 குழந்தைகளும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த நவம்பர் 15ம் தேதி மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. முன்னணி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் கலந்துகொண்டு 'வா வரலாம் வா' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரையிலரை வெளியிட்டனர். இந்த இசை வெளியிட்டு விழாவில் தயாரிப்பாளர் எஸ்.பி.ஆரின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

'வா வரலாம் வா' படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான எஸ்.பி.ஆர் தனது நண்பர் ஆறுமுகம் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். அவர் தனது நண்பரின் முதல் படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, ஆரம்பம் முதலே துணையாக நின்று அனைத்து பணிகளையும் சொந்த பணியாகவே நினைத்து அழைத்துள்ளார். 

வா வரலாம் வா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை உணவு பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆறுமுகம், தரமான காய்கறிகள், சுகாதாரமான தண்ணீர், சுத்தமான எண்ணெய் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து உணவுகளை சமைத்து படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் பரிமாறியுள்ளார். உணவின் சுவையில் குறை வைக்காத ஆறுமுகம் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தி, படப்பிடிப்பு முடியும் வரை படக்குழுவினர் ஒருவருக்கு கூட சிறு மருத்துவ செலவுகள் கூட வராதவாறு கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார். 

நண்பர் இயக்குநராக, தயாரிப்பாளராக களம் காணும் முதல் படம் என்பதால், வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கையில் இரவு பகல் பாராது உழைத்த ஆறுமுகத்துக்கு, தயாரிப்பாளரும், இயக்குனருமான எஸ்.பி.ஆர் உதவ முன்வந்த போதும், அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். 

இந்நிலையில் நண்பர் ஆறுமுகத்துக்கு இன்ப அதிர்ச்சியாக, அவர் செய்து வரும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக, மினி ட்ராக்டர் ஒன்றினை அன்பளிப்பாக இந்த இசை வெளியிட்டு விழா மேடையில் இசையமைப்பாளர் தேவா கரங்களால் வழங்கி ஆறுமுகத்தின் உழைப்புக்கு பெருமை சேர்த்ததோடு, திரைப்பட இசை வெளியீட்டு விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக அன்பளிப்பு கொடுத்ததை அரங்கில் இருந்தவர்கள் கரகோஷத்தோடு மனதார பாராட்டினர். வா வரலாம் வா திரைப்படத்தின் தயாரிப்பாளார் எஸ்.பி.ஆர் மற்றும் ஆறுமுகத்தின் நட்பை கண்டு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Va Varalam Va producer SBR gifted a tractor to his friend


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->