தி.மு.க.-வுக்கு சீமான் சவால்..2026-ல் தமிழரா? திராவிடரா? போட்டிக்கு தயாரா? - Seithipunal
Seithipunal


234 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளரை போட முடியுமா என்றும் 
 2026 தேர்தலில் தமிழரா? திராவிடரா? என போட்டியிடுவோம் என்றும்  பல ஆண்டுகளை தமிழகத்தை ஆண்ட தி.மு.க. கட்சி ஓட்டுக்கு  பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க தயாரா? என சீமான் சவால் விட்டார்.

தருமபுரியில் செய்தியாளருக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு  கூறியதாவது:-என்னுடன் மோதி ஜெயிக்க முடியாததால் பாலியல் வழக்கு என்றும்  நடிகை சொன்னாலே அது குற்றம் ஆகிவிடுமா? என கேள்வி எழுப்பினர்.மேலும் ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம், புகார் கூறிவிட்டாலே குற்றவாளி போல் முத்திரை குத்துவதா?என கேள்வி எழுப்பிய  சீமான் 

சிறையில் இருந்து கருக்கலைப்பு செய்த ஒரே ஆள் நான்தான் என்றும் ஓராண்டில் 7 முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளன் நானாகதான் இருப்பேன் என்றும் கூறினார் மேலும் நானே தெருக்கோடியில் நின்னுக்கொண்டு இருக்கேன். என்கிட்ட எங்க 2 கோடி இருக்கு என்றும் உதவின்னு கேட்கும் போது கொடுத்து உதவுறதுதான். அவங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். 

மேலும் தொடர்ந்து பேசிய சீமான் 234 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளரை போட முடியுமா என்றும் 
 2026 தேர்தலில் தமிழரா? திராவிடரா? என போட்டியிடுவோம் என்றும்  பல ஆண்டுகளை தமிழகத்தை ஆண்ட தி.மு.க. கட்சி ஓட்டுக்கு  பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க தயாரா? என சவால் விட்டார்.

மேலும் என்னை எதிர்த்து நின்று சமாளிக்க முடியாமல் அவதூறுகளை பரப்புகின்றனர் என பேசிய சீமான் அதிகபட்சம் என்னை சிறையில் அடைக்க முடியும், சிறையில் அடையுங்கள்.காவல் ஆய்வாளரின் தந்தை ராஜீவ் கொலையின் போது இறந்ததற்கு எதுவும் செய்ய முடியாது என்றும் முதன் முதலில் இந்தி பள்ளியை தமிழகத்தில் திறந்தவர் பெரியார் என கூறினார்.

மேலும் தமிழ்நாட்டில் அதிக வழக்குகளை எதிர்கொள்ளும் தலைவராக நான் இருக்கிறேன். 230 வழக்குகளை கடந்து விட்டேன் என்றும் எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சுபவன் நான் அல்ல, எல்லா வழக்குகளையும் எதிர்கொள்ளத் தயார் என்றார் சீமான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman challenges DMK Tamil in 2026? Dravidian? Ready for the competition?


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->