துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கடுத்து பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிபள்ளி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 1999ஆம் ஆண்டு இயக்குனர் எழில் இயக்கத்தில் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் மணிவண்ணன், தாமு, வையாபுரி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் வைகைப்புயல் வடிவேலு தானாம். மேலும் இந்த படத்தை முழு நீள காமெடி படமாக எடுக்க இயக்குனர் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சில காரணங்களால் நடிகர் விஜயை வைத்து காதல் திரைப்படமாக எடுத்துள்ளாராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vadivelu Missed thullatha manamum thullum movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->