அரிய வகை நோயில் சமந்தா.! 'விஜய்' பட இயக்குனர் போட்ட ட்விட்டால் விறுவிறுப்பு.!
Vamsi about Samantha Disease
தமிழில் ஹீரோயினாக அறிமுகமான சமந்தா அதன்பின் தெலுங்கு, பாலிவுட் என்று தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார். அடுத்ததாக சமந்தா நடிப்பில் யசோதா திரைப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் தான் இதன் ட்ரெய்லர் வெளியாகியது.
இந்த நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றுவது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் " யசோதா ட்ரெய்லருக்கு உங்கள் பதில் அமோகமாக இருந்தது. உங்கள் அன்பையும் உறவையும் நான் பகிர்ந்து கொண்டதால் தான், என் வாழ்க்கை மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்கும் வலிமை எனக்கு இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான நோயால் நான் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டேன். சிகிச்சை பெற்ற பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட இது சரியாக நேரம் அதிகமாக எடுக்கும்.
நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நான் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் நல்லது, கெட்டதுகளை அனுபவித்திருக்கிறேன். இன்னும் ஒரு நாள் கூட என்னால் சமாளிக்க முடியாது என்று நான் உணர்ந்தாலும், அதை சமாளித்து விடுவேன். ஐ லவ் யூ.." என பதிவிட்டுள்ளார்.
இத்தகைய சூழலில் இது குறித்து வாரிசு பட இயக்குனர் வம்சி, " சமந்தா நீங்கள் மிகவும் வலிமையானவர். உங்களை எந்த பிரச்சனையும் தடுத்து நிறுத்தி விட முடியாது. நீங்கள் எப்போதும் ஒரு சிறந்த போராளி. எனவே இதிலும் சீக்கிரம் குணமடைந்து விடுவீர்கள்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Vamsi about Samantha Disease