விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் தெலுங்கு படத்தின் ரீமேக்கா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு இயக்குரான வம்சி இயக்கி வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்து தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

வாரிசு திரைப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் வேலைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.

இந்த நிலையில் வாரிசு படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில் தற்போது நடிகர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் அதனை உற்சாகமாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

இதனிடையே தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் கடந்த 2019 ஆம் ஆண்டு வம்சி இயக்கத்தில் வெளியான மகேஷ் பாபு மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான மகரிஷி திரைப்படத்துடன் ஒத்துப்போவதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன் காரணமாக வாரிசு திரைப்படம் தெலுங்கு படத்தின் ரீமைக்கா என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் வம்சி வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப பின்னணியை கொண்ட திரைப்படம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varisu movie remake of Telugu maharishi movie?


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->