வாரே வா.. கூடி குதூகலிக்கும் 90'ஸ் பிரபலங்கள்.! சரத்குமார்-குஷ்பு- பிரபு ஒரே இடத்தில்.!   - Seithipunal
Seithipunal


பிரபல தமிழ் நடிகை குஷ்பூ நாட்டாமை படத்தில் சரத்குமாருடன் நடித்திருப்பார் அதுபோல சின்னத்தம்பி படத்தில் நடிகர் பிரபுவுடன் சேர்ந்து நடித்திருப்பார் இத்தகைய சூழலில், பிரபு மற்றும் சரத்குமார் குஷ்பூ மூவரும் சந்திப்புள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சரத்குமாருடன் குஷ்பு நடித்த நாட்டாமை மற்றும் பிரபுவுடன் நடிகை குஷ்பு நடித்த சின்னத்தம்பி போன்ற இரண்டு படங்களும் தமிழ் திரையுலகில் செம்ம ஹிட்டடித்த திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகை குஷ்புவின் வாழ்வில் இந்த இரண்டு திரைப்படங்களுமே மிக முக்கியமானது. அதில் நடித்த குஷ்புவின் கேரக்டர் அனைவரது மனதிலும் இப்பொழுதும் மறக்க முடியாத இருக்கும். சமீபத்தில் குஷ்பூ மற்றும் பிரபு இருவருமே தங்களது உடல் எடையை குறைத்து வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து சின்ன தம்பி 2 படம் தயாராகிறது என்று ரசிகர்கள் கிசுகிசுத்தனர். 

அது வெறும் கற்பனை தான் என்று பிறகு தான் தெரியவந்தது. அப்படிப்பட்ட சூழலில் நடிகை குஷ்பூ அவரது ஆஸ்தான 2 ஹீரோக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் புகைப்படத்தை நடிகை குஷ்புவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Varisu movie shooting spot stills


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->