வாய்ப்பு கொடுத்த இசைஞானி.! திட்டவட்டமாக மறுத்த இளம் நடிகை! யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைஞானி இளையராஜா. இசை மேஸ்ட்ரோ என அழைக்கப்படும் இவர் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக தமிழ் சினிமா வரலாற்றில் இசை சாம்ராஜ்ஜியத்தை நடத்திக் கொண்டிருப்பவர். தற்போது பெரும்பாலான படங்களுக்கு இசையமைப்பதில்லை என்றாலும், அவ்வப்போது ஒன்று அல்லது இரண்டு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தற்போது இவரது இசையில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் சூரி,விஜய் சேதுபதி, கௌதம் மேனன்  மற்றும் ராஜீவ் மேனன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இசைஞானி இளையராஜா இந்தத் திரைப்படத்தினை வெகுவாக பாராட்டினார்.

இந்தத் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சகோதரியும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் மருமகளுமான பவானி ஸ்ரீ, சூரிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இசையை பாரம்பரியமாக கொண்ட குடும்பத்திலிருந்து அவர் வந்ததால் இந்தத் திரைப்படத்தில் அவருக்கு பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 

பவானி ஸ்ரீ, இசை பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால்  இசைஞானி இளையராஜாவே அவரிடம் இந்த திரைப்படத்தில் ஒரு பாடலை பாடுமாறு கேட்டிருக்கிறார். ஆனால் தான் இசை பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தாலும் தனக்கு இசை பற்றி எதுவும் தெரியாது என்பதால் அந்தப் பாடலை பாட மறுத்துவிட்டாராம் பவானி ஸ்ரீ. இளையராஜா கொடுத்த வாய்ப்பையே வேண்டாம் என்று சொல்லிவிட்டாரே என்ற இந்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vdutalai so star bhavani shri turn down an offer to sing a song in viduthalai movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->