வீர தீர சூரன் 2 படத்தை வெளியிட தடை நீட்டிப்பு..!
veera theera sooran movie released postpond
இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'வீர தீர சூரன் 2'. எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் இன்று வெளியாக இருந்த நிலையில் மும்பையை சேர்ந்த பி4யு என்ற நிறுவனம், வீர தீர சூரன் 2 படத்தின் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனால் டெல்லி உயர்நீதிமன்றம் படத்தை இன்று வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்த போது, "வீர தீர சூரன் படக்குழு உடனடியாக ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும். மேலும் படத்தின் ஓ.டி.டி உரிமம் விற்கப்படும் முன் ரிலீஸ் தேதியை வெளியிட்டதால், 48 மணி நேரத்திற்குள் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்" என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
English Summary
veera theera sooran movie released postpond