நாட்டில் நக்சலிசம் அதிகரிக்க காரணம் காங்கிரசின் கொள்கை; சத்தீஸ்கரில் மோடி பேச்சு..!
Modi speech in Chhattisgarh says that the reason for the increase in Naxalism in the country is the policies of the Congress
பிரதமர் மோடி சத்தீஸ்கருக்கு பயணம் செய்துள்ளார். அங்கு பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மொஹபத்தா கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, அங்கு நடந்த நிகழ்வில் ரூ.33,700 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகளை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்; காங்கிரசின் கொள்கைகளால், சத்தீஸ்கர் உட்பட பல மாநிலங்களில் பல தசாப்தங்களாக நக்சலிசம் ஊக்கம் பெற்றது என்றும், வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் நக்சலிசம் செழித்தது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சி என்ன செய்தது? அத்தகைய மாவட்டங்களை பின்தங்கியதாக அறிவித்து அதன் பொறுப்பிலிருந்து விலகிச் சென்றது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், மாவோயிஸ்ட் வன்முறையில் பல தாய்மார்கள் தங்கள் அன்புக்குரிய மகன்களை இழந்துள்ளதாகவும்,, பல சகோதரிகள் தங்கள் சகோதரர்களை இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மோடி அங்கு பேசுகையில்; முந்தைய அரசாங்கங்களின் அலட்சியம், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது என்று தெரிவித்துள்ளார். முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் ஏழை பழங்குடியினரின் வசதிகளை ஒருபோதும் கவனித்துக் கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து, பேசிய அவர், பாஜக அரசின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட முயற்சிகள் காரணமாக நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அமைதியின் புதிய சகாப்தம் காணப்படுகிறது என்றும், காங்கிரஸின் கொள்கைகளால் நக்சலிசம் அதிகரித்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், பாஜக அரசு மக்களுக்கு வீடுகளை கட்டுவது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையையும் வளப்படுத்துகிறது என்று மோடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Modi speech in Chhattisgarh says that the reason for the increase in Naxalism in the country is the policies of the Congress