அசத்தல் காம்போ!!! பூரி ஜெகன்நாத் மற்றும் விஜய் சேதுபதி...!!! வெற்றி பெறுமா இந்த காம்போ?
Puri Jagannath and Vijay Sethupathi combo successful
'பூரி ஜெகநாத்' தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர். இவர் பவன் கல்யாண் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டில் பத்ரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

பிறகு மகேஷ் பாபு நடிப்பில் போக்கிரி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்று படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தனர்.இவர் இயக்கிய அப்பு, சிவமணி, பிஸ்னஸ்மேன்,இட்லு ச்ரவனி சுப்ரமணியம், இடியட், ஹார்ட் அடாக், டெம்பர், இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.
இவர் கடைசியாக டபுள் இஸ்மார்ட் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
விஜய் சேதுபதி நடித்து அவரது 50-வது திரைப்படமான மகாராஜா திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றதை அடுத்து பூரி ஜெகநாத் இணைந்துள்ளார். இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
பூரி ஜெகநாத் சமீபத்தில் இயக்கிய எந்த திரைப்படமும் சரியாக மக்களிடம் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதி இவருடன் இணைவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.
English Summary
Puri Jagannath and Vijay Sethupathi combo successful