'Once a spy, always a spy' - சர்தார் 2 படத்தின் ப்ரோமோக்கு தயாரா?
Once a spy always a spy promo film Sardaar 2
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கார்த்தியின் நடிப்பில், கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் 'சர்தார்'. இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி,தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.இப்படத்தில் கார்த்தியுடன் ரஜிஷா விஜயன்,யூடியூப் பிரபலம் ரித்விக்,லைலா,ராஷி கண்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் நடிகர் கார்த்தி.இந்த படத்தின் 2 டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். முதலில் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
ஆனால், தற்போது அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சாம் சி.எஸ் பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு சென்னை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், இப்படத்தின் அறிமுக புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், 'சர்தார்' முதல் பாகத்தில் நடந்தவைகளை நினைவூட்டும் பாணியில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும், நாளை 'சர்தார் 2' படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.இது மேலும் இப்படத்தில் எதிர்பார்ப்பை ஊக்குவித்துள்ளது.
English Summary
Once a spy always a spy promo film Sardaar 2