தனுஷின் 'இட்லி கடை' படத்தை வாங்கிய பிரபல OTT நிறுவனம் எது தெரியுமா?
famous OTT company bought Dhanush film Idli Kadai
பிரபல தமிழ்திரையுலக நடிகர் தனுஷ் இயக்கத்தில் 3 வது படமான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் அண்மையில் வெளியானது.இதைத்தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.

இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இதில் அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திரைப்படத்தின் சில காட்சிகள் இன்னும் எடுக்கப்படாதலால் திரைப்படம் அந்த தேதியில் வெளியாகாது என படக்குழு சமீபத்தில் தெரிவித்தது.
இதனிடையே படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாகவும்,அதனை 45 கோடிக்கும் மேல் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
English Summary
famous OTT company bought Dhanush film Idli Kadai