ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 'வெனம் தி லாஸ்ட் டான்ஸ்' பட டிரெய்லர்! இணையத்தில் வைரல்! - Seithipunal
Seithipunal


கடந்த 2007-ம் ஆண்டு 'ஸ்பைடர் மேன் 3' திரைப்படம் வெளியானது . இப்படத்தில் ஹீரோவுக்கு வில்லனாக வந்த வெனம் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் கவர்ந்து ஈர்க்கப்பட்டது. அதன்பிறகு முக்கிய வில்லனாக வெளியான ஸ்பைடர்மேன் திரைப்படங்களில் வெனம் நடித்து இருந்தது.

இதனை தொடர்ந்து, 'வெனம்' என்ற கேரக்டரை மையமாகக் கருத்தில் கொண்டு கடந்த 2018-ம் ஆண்டு இயக்குனர் ரூபன் பிளீஷர் இயக்கத்தில் 'வெனம்' திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் டாம் ஹார்டி நடித்து உள்ளார்.

இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இதன் 2ம் பாகம், "வெனம் லெட் தேர் கிரேனஜ்" என்ற பெயர் சூட்டப்பட்டு திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ஆன்டி செர்க்கிஸ் இயக்கி இருந்த இப்படம் உலகமெங்கும் மிகப்பெரிய வசூல் சாதனை படத்ததுள்ளது. இநிலையில், இப்படத்தின் 3ம் பாகம் மற்றும் இறுதிபாகமாக "வெனம் தி லாஸ்ட் டான்ஸ்" என்ற பெயரில் உருவாகியுள்ளது.

நடிகர் டாம் ஹார்டி நடிப்பில் தற்போது இந்த படத்தை இயக்குனர் கெல்லி மார்செல் உருவாகியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வருகிறது.

மேலும், அடுத்த மாதம் 25-ம் நாளன்று இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழிபெயர்த்து வெளியாக உள்ளது, இந்நிலையில்  "வெனம் தி லாஸ்ட் டான்ஸ்" படத்தின் இறுதி டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Venom The Last Dance film trailer that attracted the attention of fans Viral on the Internet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->