எதிர்பார்ப்பில் தல ரசிகர்கள் - இன்று வெளியாகிறது விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக்.! - Seithipunal
Seithipunal


திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் 'விடாமுயற்சி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. 

இந்தப் படப்பிடிப்பில் ஸ்டண்ட் காட்சிகள் எப்படி உருவாகிறது என்ற வீடியோவும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த நிலையில், இன்று இரவு 7.03 மணிக்கு 'விடாமுயற்சி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vidamuyarchi movie first look release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->