''விடுதலை 2'' முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal


வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான 'விடுதலை' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கான மீதமுள்ள காட்சிகளுக்கான படபடப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் படமாக்கப்படுகிறது. 

மேலும் இரண்டாம் பாகத்தில் நடிகை மஞ்சு வாரியர், நடிகர் எஸ்.ஜே. சூர்யா சிறப்பு கதாபாத்திரங்களில் நடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11.30 மணி அளவில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்று வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viduthalai 2 First Look Poster Release Update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->