பல சர்ச்சைகளுக்குப் பிறகு விக்னேஷ் சிவனின் ஒரு அசத்தல் பதிவு.! - Seithipunal
Seithipunal


சில மாதங்களுக்கு முன்பு நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்துகொண்டனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஒளிபரப்பு செய்ய உரிமையை வாங்கியது. இதனை விரைவில்  நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இயக்கும் பணிகளை கெளதம் மேனன் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருந்தார்கள். 

அதன் பின்னர், இவர்களின் குழந்தைகள் வாடகைத்தாய் மூலம் பிறந்திருக்கலாம் என்று தகவல் வெளியான நிலையில் அது மக்களிடையே பெரும் சர்ச்சையைக் ஏற்படுத்தியது. மேலும், சட்ட விதிமுறைகளை மீறி இருவரும் வாடகைத்தாயின் மூலம் குழந்தை பெற்றுள்ளதாகவும் இவர்கள் மீது விமர்சனம் எழுந்து வந்தது. 

இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் மருத்துவத்துறை சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்நிலையில், நேற்று அந்த விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2016ஆம் ஆண்டு பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் சட்ட விதிகளை மீறி செயல்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "ஆரோக்கியம் எப்போதும் மருந்திலிருந்து வருவதில்லை. அது பெரும்பாலான நேரங்களில் மன அமைதி, ஆன்மாவின் அமைதி போன்றவற்றில் இருந்துதான் வருகிறது.

மேலும் அது சிரிப்பு மற்றும் அன்பில் இருந்தும் வருகிறது" என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்தப் பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vignesh shivan social media post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->