மீண்டும் டபுள் ஆக்ஷனில் களமிறங்கும் விஜய்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு  முழுவதும் முடிவடைந்துவிட்டதாக படக்குழு  அறிவித்திருந்தது. விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதனைத்தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay 66 in double action


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->