அஜித் வசூலை ஒரே நாளில் தட்டி தூக்கிய விஜய்!  - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படம், தமிழகத்தில் பாதுகாப்பு காரணங்களால் அதிகாலை காட்சிக்கு மத்திய அரசு அனுமதிக்காமல் காலை 9 மணிக்கு முதல் காட்சி துவங்கப்பட்டது. 

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும் பைரசி தளங்களில் இந்த திரைப்படம் வெளியானதால் பட குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

உலக அளவில் 6000 திரையரங்குகளில் வெளியான லியோ முதல் நாளில் ரூ. 115-125 கோடி வரை வசூலித்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

தமிழகத்தில் மட்டும் லியோ ரூ. 33 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் லியோ படத்தின் முதல் நாள் வசூலாக ரூ.13.65 கோடி வசூலித்துள்ளதாகவும் இது கர்நாடகத்தில் துணிவு படம் மொத்தமாக வசூலித்த ரூ.13.25 தொகையை விட அதிகம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதன் மூலம் கர்நாடகாவில் அஜித்தின் துணிவு செய்த வசூலை விஜய்யின் லியோ முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay beat Ajith collection one day


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->