சாப்பிட்ட உணவுக்கு காசு கொடுக்காமல் நழுவிய நபர்கள்! ஊழியரை தரதரவென காரில் இழுத்துச் சென்ற கொடூரம்!
People who slipped without paying for the food they ate The brutality of dragging the employee in a standard car
மகாராஷ்டிரா மாநிலத்தில் சாப்பிட்ட உணவுக்குக் காசு கேட்ட வெயிட்டரை அடித்து காரில் தரதரவென ஒரு 1கிமீ தூரத்துக்கு தரதரவென இழுத்து சென்ற நபர்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட்மாவட்டத்தில் மெஹ்கர் பந்த்ராபூர் பால்கி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் காரில் வந்த மூன்று நபர்கள் அங்கு சாப்பிட்டுள்ளார். பின்னர், சாப்பிட்டு முடித்துவிட்டு வெயிட்டரிடம் பில்லுக்கு காசு கொடுக்க ஸ்கெனரை எடுத்து கொண்டு வரும்படி கூறியுள்ளனர்.
அவர் ஸ்கெனரை எடுத்து கொண்டு வருவதற்குள் அங்கிருந்து நைசாக நழுவிய மூவரும் தங்களின் காரில் ஏறி தப்பிக்க முயற்சித்தனர். அந்த மூவரும் காரில் ஏறும் சமயத்தில் அவர்களை சாப்பிட்டதுக்கு காசு கொடுத்துவிட்டு போகச்சொல்லி அந்த வெயிட்டர் அவர்களை தடுக்க முயன்றுள்ளார். இதனைத்தொடர்ந்து , காரின் பக்கவாட்டு கதவு வழியே வெயிட்டரின் கையை ஒருவர் பிடித்து கொண்டார், அதோடு அவரை சுமார் 1 கிலோமீட்டர் வரை தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வெயிட்டரை 1 கிலோமீட்டருக்கு தரதரவென இழுத்துசென்ற கொடூரர்கள் காரை நிறுத்திவிட்டு அவரை போட்டு அடித்துத் துன்புறுத்தி அவரிடமிருந்த இருந்த 11,500 ரூபாயை பறித்துக்கொண்டு அவரது கண்களை துணியால் கட்டி இரவு முழுவதும் காருக்குளேயே அடைத்து வைத்து துன்புறுத்தியபின் அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார், தப்பிச் சென்ற அந்த மூவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
English Summary
People who slipped without paying for the food they ate The brutality of dragging the employee in a standard car