குட்கா பொருட்கள் விற்பனை செய்த 9 கடைகளுக்கு சீல்! ரூ.2.50 லட்சம் அபராதம்! - Seithipunal
Seithipunal


அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி, உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல் துறையினர் இணைந்த 6 குழுக்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. 

இக்குழுவினர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அருகில் உள்ள அனைத்து கடைகளிலும், இதை தவிர மற்ற வேறு பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 571 முறை அணைத்து கடைகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனைகளின் போது  251 கடைகளில் குட்கா விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. மேலும், 1,183 கிலோ 920 கிராம் எடையிலான புகையிலை பொருட்கள் 28 வாகனங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த குட்கா விற்பனை தொடர்பாக 251 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும் 251 கடைகள் மற்றும் 28 வாகனங்களுக்கும் ரூ.65.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 23 கிலோ 854 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை, கடந்த 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை 9 கடைகள் மற்றும் 1 வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 9 கடைகள் சீல் வைக்கப்பட்ட நிலையில், 9 கடைகள் மற்றும் 1 வாகனம் என மொத்தம் ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

9 shops selling Gutka products sealed! Rs. 2.50 lakh fine


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->