மனைவியுடன் வந்து கள்ளக்காதலியை வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதலன்! - Seithipunal
Seithipunal


பெரம்பலூரில் கள்ளக்காதலியை கத்தியால் வெட்டிய கள்ளக்காதலன் போலீசுக்கு பயந்து சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றார். 

பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி ரோடு, இந்திரா நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி மகாலட்சுமி (28), திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூரை சேர்ந்த சிந்துஜாவும் நெருங்கிய மகாலட்சுமியும் நெருங்கிய தோழிகள். அதனால் சிந்துஜா வீட்டுக்கு மகாலட்சுமி அடிக்கடி வருவார். 

இந்நிலையில் ஒரு வருடத்துக்கு முன் மகாலட்சுமிக்கும் சிந்துஜாவின் கணவரான தொழிலாளி நாகராஜுக்கும் (37) தகாத உறவு ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் திடீரென கள்ளக்காதலன் நாகராஜுடன் பேசுவதை மகாலட்சுமி நிறுத்தி விட்டார். அப்போது தான் வேறு ஒரு நபருடன் மகாலட்சுமி பேசிக்கொண்டு இருப்பது நாகராஜுக்கு தெரியவந்தது. இதனை தெரிந்து கொண்ட நாகராஜ் கோபமடைந்தார்.

இந்நிலையில் நேற்று நாகராஜ், சிந்துஜாவை அழைத்து கொண்டு சிறுவாச்சூர் கோயிலுக்கு சென்றுள்ளார் . அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு மகாலட்சுமியை பார்த்து விட்டு வரலாம் என முடிவு செய்தனர். இதையடுத்து இரவு மகாலட்சுமியின் வீட்டுக்கு பூ வாங்கி கொண்டு சென்றனர். அப்போது நாகராஜ், வாகனத்தில் உள்ள ‘டேங்க் கவரில் இருந்து பூவை எடுத்து கொண்டு வா’ என்று மனைவி சிந்துஜாவிடம் கூறியுள்ளார். 

பூவை எடுக்க சிந்துஜா வெளியே சென்றபின், திடீரென நாகராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகாலட்சுமியை சரமாரியாக வெட்டினார். பூ எடுத்துக்கொண்டு உள்ளே வந்த சிந்துஜா அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டு கதறினார். பக்கத்தில் குடியிருந்தவர்கள் விரைந்து வந்து, ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டு இருந்த மகாலட்சுமியை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நாகராஜ், வீட்ற்குள் கதவை உள்பக்கமாக தாழிட்டு உள்ளே இருந்தார்.

இது குறித்து தகவலறிந்து பெரம்பலூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை தட்டி நாகராஜை வெளியே வருமாறு கூறிய நிலையில் அவர் வரவில்லை. பின்னர் கதவை திறக்கவில்லை என்றால் கதவை உடைத்து திறப்போம் என போலீசார் கூறினர். 

இதனால் பயந்துபோன நாகராஜ் காஸ் சிலிண்டரை திறந்து விட்டு, தீயை பற்ற வைத்துள்ளார். திடீரென தீப்பற்றியதால் நாகராஜிக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவரது சத்தம் கேட்டதால், உடனடியாக போலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தண்ணீர் ஊற்றி சிலிண்டரை அணைத்து நாகராஜுவை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இதனைத்தொடர்ந்து, போலீசார் நாகராஜ் மீது  வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The forger who came with his wife and tried to commit suicide by cutting the forger


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->