வம்சி மீது.. செம்ம கடுப்பில் விஜய்.. ஓ.. இது தான் மேட்டரா.?!
Vijay may angry with vamsi
கோலிவுட் சினிமாவில் மிக முன்னணி நடிகராக இருப்பவர் தான் தளபதி விஜய். வம்சி இயக்கும் வாரிசு திரைப்படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் சண்டைக் காட்சிகள், பாடல்கள் உள்ளிடவை எடுக்கப்பட உள்ளதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில் இயக்குனர் வம்சிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் வாரிசு படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் எடிட் செய்யப்பட்ட வாரிசு படத்தின் பாகங்களை விஜய் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
வாரிசு படத்திற்காக விஜய் ஒதுக்கி இருக்கும் நேரத்தை விட வம்சி அதிகப்படியான நாட்களை எடுத்துக் கொள்வதாகவும், இதனால் அவர் மீது விஜய் கடுப்பில் இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
English Summary
Vijay may angry with vamsi