நயன்தாரா படத்தை கைப்பற்றிய உதயநிதி.?! ஹீரோவே வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இதில், நடிகர் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த நவம்பர்-18 ஆம் தேதி நயன்தாராவின் 37 வது பிறந்தநாள் கொண்டாடபட்டதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியது. 

அதில் சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் புகைப்படங்களை வைத்து தனித்தனி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இந்த படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது விஜய்சேதுபதி தனது முகநூல் பக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் பட தமிழக திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay sethupathy fb post about kvrk


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->