பிரம்மன் வடித்த காவியம் - மகளுக்கு பெயர் சூடிய நடிகர் புகழ்.! - Seithipunal
Seithipunal


பிரம்மன் வடித்த காவியம் - மகளுக்கு பெயர் சூடிய நடிகர் புகழ்.!

விஜய் தொலைக்காட்சியில் ’கலக்க போவது யாரு?’, ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்றவர் புகழ். இதைத்தொடர்ந்து அவர் அஜித், சந்தானம் உள்ளிட்ட நடிகர்களின் படங்களிலும் நடித்து வந்தார். 

இதையடுத்து, இவருக்கும் பென்சி என்பவருக்கும் கடந்த வருடம் காதல் திருமணம் நடந்தது. அதன் பின்னர் தான் தந்தையாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்த புகழ் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதையும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்.

இந்த நிலையில், தன் குழந்தைக்கு "ரித்தன்யா" என்று பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதனை புகைப்படத்துடன் பகிர்ந்து, ‘என் வாழ்வை புன்னகையால் இன்புறச் செய்ய தவமாய் கிடைத்த அழகியடி நீ! 

கம்பன் இன்றிருந்தால் உனக்கென தனிக்கவிதையே வடித்திருப்பானடி! ஊரே கண் வைக்கும் அளவிற்கு, பிரம்மன் வடித்த காவியம் நீயடி என் செல்ல மகளே! கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை.

இருந்தாலும், எங்கள் வாழ்வை வசந்தமாக்கிய எங்கள் தேவதை தனித்து தெரியவே, இன்று முதல் நீ, பு.ரித்தன்யா என்று அழைக்கப்பட இருக்கிறாய்’ என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay tv pukazh daughter name anounce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->