'பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர் இவர்' -விஜயகாந்த் மறைவிற்கு சிவகார்த்திகேயன் இரங்கல்!
Vijayakanth death sivakarthikeyan pens emotional note
நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்து விட்டார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள், திரையுலகையைச் சேர்ந்தவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயன் விஜயகாந்த்க்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, 'தமிழ் திரை உலகம் நமக்கு தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சி கலைஞர் திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்து செய்தி ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தி விட்டது.
எத்தனையோ கோடி உள்ளங்களில் அன்புக்கு சொந்தக்காரர். அள்ளி தரும் பண்புக்கும், அரவணைப்பும், தலைமை பண்பும் தனக்கே உரிய பாணியில் கொண்டவர்.
பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர். நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும், அன்பால் பண்பால் அறத்தால் மரத்தால் வெற்றி கொண்டவர்.
இவரது மறைவு திரை உலக மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் ஒரு மிகப்பெரிய இழப்பாக உள்ளது. புரட்சி கலைஞர் திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.
English Summary
Vijayakanth death sivakarthikeyan pens emotional note