விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியனுக்கு கை கொடுக்கும் லாரன்ஸ்.... விரைவில் கேமியோ ரோல்! - Seithipunal
Seithipunal


தேமுதிக நிறுவனத்  தலைவரும்  முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான் விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உயிரிழந்தார்.  இவரது மறைவுக்கு மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதி  சடங்களில் கலந்து கொள்ளாத திரைத்துறையினர். கோயம்பேடில்   உள்ள அவரது நின்னைவிடத்தில் அஞ்சலி விட்டு, சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள  வீட்டிற்கு சென்று விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்துவிட்டு விஜயகாந்த்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். 

ஏற்கனவே சிவகுமார், கார்த்தி, சூர்யா, விஷால் போன்ற முன்னணி நடிகர்கள் சென்றிருந்தனர்.  இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு,  வீட்டிற்குச் சென்று விஜய்காந்தின் மனைவி  பிரேமலதா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:  “விஜயகாந்த் வீட்டில் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய பிறகு, பிரேமலதாவின் சகோதரி, சண்முக பாண்டியனை காண்பித்து ஹீரோவாக நடித்து வருகிறார். நீங்கதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும் என்றார்.  அவர் கூறிய அந்த வார்த்தை என்னை நிறைய யோசிக்க வைத்தது. எதாவது நம்ம பண்ணியே ஆக வேண்டும் என முடிவெடுத்தேன். விஜயகாந்த் சார் எத்தனையோ பேருக்கு உதவி செய்திருக்கிறார். தர்ம காரியங்களும் பண்ணியிருக்கிறார். அதோடு நிறைய படங்களில் கெஸ்ட் ரோல் பண்ணுவார். 

மற்றவர்களை வளர்த்து விடுவதில் அவருக்கு அவ்ளோ சந்தோஷம். நானும் அவர் நடித்த கண்ணுபடப் போகுதய்யா படத்தில், மூக்குத்தி முத்தழகு பாடலுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்தேன். என்னை நிறைய ஊக்கப்படுத்துவார். 

அதனால் சண்முக பாண்டி நடிக்கும் படத்திற்கு பப்ளிசிட்டி செய்யும் வேலையை முழுவதுமாக இறங்கி பண்ண முடிவெடுத்துள்ளேன். அதோடு அந்த படக்குழுவினர் ஒப்புக்கொண்டால் அந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில், ஃபைட் சீனோ, பாட்டோ அவர்கள் என்ன பண்ண வேண்டும் என நினைக்கிறார்களோ அதை பண்ண தயாராகவுள்ளேன். 

இதுமட்டுமல்லாமல் சண்முக பாண்டியனும் நானும் நடிக்கிற மாதிரி இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் இருந்தாலும் நடிக்க தயாராகவுள்ளேன். அதேபோல் விஜய் பிரபாகரன் அரசியலில் இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்” எனப் பேசியுள்ளார்.   

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayakanth's son Shanmukpandian lends his hand to Lawrence.... Cameo role soon!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->