சதீஷ் நடிக்கும் வித்தைக்காரன் படத்தின் டீசர் வெளியீடு.!
viththaikaran movie teaser release today
சதீஷ் நடிக்கும் வித்தைக்காரன் படத்தின் டீசர் வெளியீடு.!
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சதீஷ். இவர் எதிர்நீச்சல், வகை சூடவா, மதராசபட்டினம், நய்யாண்டி, மெரினா உள்ளிட்ட பல படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
இதையடுத்து நடிகர் சதீஸ் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் நாயகனாகவும், திகில் மற்றும் காமெடி திரைப்படமான "ஓ மை கோஸ்ட்" என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.
![](https://img.seithipunal.com/media/viththaikaaran 1-snw4q.png)
இதையடுத்து, நடிகர் சதீஷ் தற்போது "வித்தைக்காரன்" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை வெங்கி என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
நடிகர் சதீஷ் மேஜிசீனியனாக நடித்துள்ள இந்த படத்தில் தங்கம் மற்றும் வைரக் கடத்தல் கதைக்களமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. காமெடியை விட திரில்லருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதை இந்த டீசர் உறுதி செய்துள்ளது.
English Summary
viththaikaran movie teaser release today