பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார்.!!
vj anandha kannan passed away
சன் மியூசிக் இருந்து மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன். இவர் வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
நகைச்சுவையாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய ரசிகர்கள் மனதில் நினைக்கும் இடம் பிடித்தவர் ஆனந்த கண்ணன். சிந்துபாத் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஆனந்த கண்ணன், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி ஆனந்த கண்ணன் உயிரிழந்தார். ஆனந்த கண்ணன் மறைவுக்கு திரைத் துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
vj anandha kannan passed away