"என்ன கோபி இதெல்லாம்.?" ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பாக்கியலட்சுமி கோபியின் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை தொலைக்காட்சி தொடர்கள். தினமும் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் இல்லத்தரசிகளின் அன்றாட வாழ்வில் கலந்தவை. அதிலும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் செல்லும் தொடர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அந்தத் தொடருக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கும்.

அப்படியான ஒரு தொடர் தான் பாக்கியலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. டிஆர்பி வரிசையிலும் எப்போதும் முன்னணியில் இருக்கும் இந்த தொடர் கோபி மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய இருவரின்  வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்களை உள்ளடக்கிய கதையாகும்.

தற்போது பாக்யாவை பிரிந்து ராதிகாவுடன் வசித்து வருகிறார் கோபி. பாக்கியம் இருக்கும் அதே தெருவிலேயே வீடு எடுத்து தங்கி இருக்கிறார்கள் கோபியும் ராதிகாவும். பாக்கியாவிற்கு உறுதுணையாக இருப்பது அவரது மகன் எழில்தான். எந்த சூழ்நிலையிலும் தாயை விட்டுக் கொடுக்காமல் அவருக்காக எதையும் செய்யும் மகன் எழிலின் துணையுடன் தனது குடும்ப பிரச்சினைகளுக்கு எதிராக களம் ஆடி வருகிறார் பாக்யா. இவ்வாறு பாக்கியலட்சுமி தொடர் விருவிருப்பாக சென்று  கொண்டிருக்கும் வேளையில் அந்த நிகழ்ச்சியின் தரப்பிலிருந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

அந்த செய்திகளின்படி கோபியாக நடித்து வரும் சதீஷ்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் சீரியலில் ரஞ்சித் களமிறங்கி விட்டார் அவருக்கு உங்களது ஆதரவை கொடுங்கள். பாக்கியலட்சுமி முன்பிருந்ததை விட இன்னும் பல பாராட்டுகளை பெற வேண்டும் என குறிப்பிட்டிருநாதார். வயதாகி விட்டதால் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார். ‌‌

 

இந்நிலையில் சத்திஷ் குமார் பாக்கியலக்ஷ்மி ரசிகர்களுக்கு "சம்மர் கட் பண்ணி இருக்கிறேன். புதிய ப்ரோமோவில் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்" என வெளியிட்டிருக்கிறார். சின்னத்திரை ரசிகர்களிடம் இதுதான் தற்போது பேச்சு பொருளாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

what happened to bakyalakshmi fame gobi he makes a shocking revealation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->