தமிழும் சரஸ்வதியிலிருந்து விலகும் முன்னணி நடிகை.! ரசிகர்கள் ஷாக்.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் முக்கியமானது தமிழும் சரஸ்வதியும் என்ற தொடராகும். 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் மற்ற  தொடர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி வைத்து வருகிறது.

இந்தத் தொடரில்  தீபக் தினகர் மற்றும் நட்சத்திரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்தத் தொடரை குமரன் என்பவர் இயக்கியிருக்கிறார். சின்னத்திரை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தொடரில் வசு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் புகழ்பெற்றவர் தர்ஷனா. இவர் தற்போது இந்த நாடகத்திலிருந்து வெளியாவதாக அறிவித்திருக்கிறார். இதனால் தமிழும் சரஸ்வதியும் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததை தொடர்ந்து இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் தர்ஷனா. இதை இவரது ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இவருக்கு பதிலாக வசு இடத்தில் புதியதாக நடிக்கப் போகும் நடிகை யார்.? என்று அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What is the reason for the actress to leave the serial midway


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->