விக்ரம் படத்தின் பாடல் வரிகள் திடீரென நீக்கம்.! அரசியல் நெருக்கடியால் நீக்கப்பட்டதா.?! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில், ஷிவானி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் கடந்த மே 15-ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு முன்பாகவே மே 11ம் தேதி படத்திலிருந்து முதல் பாடலான "பத்தல பத்தல" எனும் பாடல் வெளியிடப்பட்டது.சொந்தமாக கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், சாண்டி நடனம் அமைத்து கமல்ஹாசன் குத்தாட்டம் போடுவது போல் இருந்த காட்சிகளால் பாடல் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. 

இது ஒருபுறம் இருந்தாலும் மத்திய அரசை சீண்டுவது போல விமர்சனங்கள் இடம்பெற்றதால் பாடலின் சில வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று தியேட்டரில் வெளியான வெர்சனில் இந்த பாடல் கமல்ஹாசனின் ஓபனிங் பாடலாக அமைந்திருந்தது.

ஆனால் முழுவதுமாக பாடல் இடம் பெறாமல் பாதியிலேயே கட்டானது. குறிப்பாக சர்ச்சைக்குள்ளான வரிகள் எதுவும் இதில் இடம் பெறாததால் படத்தின் நீளம் கருதி அவை குறைக்கப்பட்டதா? அல்லது அரசியல் நெருக்கடியால் நீக்கப்பட்டதா? என்று கேள்வி எழத்தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why vikram movie song lyrics deleted


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->