முடிவுக்கு வரும் வானத்தைப் போல சிரியல் -இது தான் காரணம் - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில், 2020ம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய வானத்தைப் போல சீரியல் , சேனலின்  பிரைம் டைமில் அதிக ரேட்டிங் பெற்று வந்தது. ஆயிரம் எபிசோடுகளைக் கடந்து விட்ட போதும், நல்ல ரேட்டிங் கிடைத்து வந்ததால் 'இப்போதைக்கு இந்த சிரியல் முடியாது' எனப் பலரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இது தொடரின் ரசிகர்களை மிகவும்  ஏமாற்றமடையச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அண்ணன் - தங்கை பாசத்தை வைத்து  ஹிட்டான சீரியல் இது. ஸ்வேதா கெல்ஜ் முதலில் இந்த தொடரில் நடித்து வந்த நிலையில்,  பின்னர் அவருக்குப் பதிலாக மன்யா ஆனந்த் 'துளசி' என்ற தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்தார். அதேபோல அண்ணன் கேரக்டரில்  முதலில் தமன் நடித்த நிலையில், பின்னர்  ஶ்ரீ குமார் வந்தார். இந்நிலையில் இந்த சீரியல் இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது.  இந்த சூழலில் தற்போது  சிரியலை முடித்ததன் பின்னணியிலும், ஆர்ட்டிஸ்டுகள் சிலரால்  சேனலுக்கும் தயாரிப்புத் தரப்புக்கும் மனக்கசப்புகள் உருவானதாக  ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அடுத்தடுத்த நடிகர்கள் விலகியது ஆர்ட்டிஸ்டுகளின் தனிப்பட்ட பிரச்னை என்றும், பொதுவாகவே இனி ஆயிரம் எபிசோடு வரைக்கும் போக வேண்டாம் என்றும், ஐநூறு அறுநூறு எபிசோடுகள் போதும் என்ற முடிவை சேனல் எடுத்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் ஸ்ரீ குமார் கூறுகையில், ஒரு  சீரியல் ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல்  வந்தால் பழைய ஃபீல் வந்திடுவிடுகிறது என்று கூறுவதாகவும், நான் கேள்விப்பட்டவரை கைவசம் சில புது சீரியல்கள் இருந்ததால் தான்,  இந்த சீரியல் முடிந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

will come to an end vanathai pola serial This is the reason


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->