கொலுசு அணிவிப்பதற்கு பின்னால் இப்படி ஒரு அதிசயத்துடன் கூடிய ரகசியமா?.!!
benefits of kolusu
தமிழர்களின் பாரம்பரியத்தில் நகைகள் என்பது மிகவும் முக்கியத்தும் வாய்ந்த பொருட்களில் ஒன்றாக அன்றிலிருந்து இன்று வரை இருந்து வருகிறது. நகைகளை அணிவதன் மூலமாக நமது உடலின் வர்ம புள்ளிகள் தூண்டப்படுவதை அறிந்த தமிழன் அன்றே நமக்கு நகைகளை கட்டாயம் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டான்.

இதன் மூலமாக நமது உடலில் வர்ம புள்ளிகள் தூண்டி விடப்பட்டு, உடலின் ஒவ்வொரு பாகமும் சிறப்பாக செயல்படுகிறது. உடலின் வெப்பத்தை குறைத்து உடலை எந்த சமயத்திலும் குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கத்தை விட மேலான ஒரு பொருள் இல்லை. நமது உடலில் அணியும் தங்கம் நமது உடலுடன் எந்த நேரத்திலும் ஒட்டிக்கொண்டார் போல உள்ளது.
இதனால் உடலின் அழகும் அதிகரிக்கும். நமது உடலை தாக்கும் மற்றும் ஏற்பட வாய்ப்பிருக்கும் சில வகை நோய்கள் உருவாகாமல் தவிர்க்க தங்கமானது உதவுகிறது. மருந்துகளை உபயோகம் செய்வதை விட தங்க நகைகளை அணிந்தாலே பல வகை நோய்களில் இருந்து தப்பிக்க உதவும். கழுத்தில் தங்கமும் - கால்களில் வெள்ளியும் அணிவது நமது வழக்கம்.

நமது முன்னோர்களின் கூற்றுப்படி தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் கால்களில் தங்கம் அணியப்படுவதில்லை. வெள்ளி நகைகள் நமது ஆயுளை அதிகரித்து, உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும். சிறுவயதாக இருக்கும் சமயத்தில் குழந்தையின் உற்சாகத்திற்கு கொலுசுகள் அணிவிட்பது வழக்கம். இதுமட்டுமல்லாது குழந்தையின் அசைவானது சரியாக இருக்கும். இதனால் பல விபரீதத்தை தடுக்கலாம்.

பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு உணர்ச்சி வசப்படுதல் அதிகம். பெண்கள் கால்களில் கொலுசுகளை அணிவிப்பதன் மூலமாக குதிங்கால் நரம்பு மூளைக்கு சென்று உணர்ச்சியை குறைத்து கட்டுப்படுத்துகிறது. இதனாலேயே பெண்கள் கால்களில் கொலுசுகளை அணிகின்றனர். இதுமட்டுமல்லாது பெண்களின் இடுப்பானது நன்றாக வலுப்பெறுகிறது.