தஞ்சாவூரில் பெண் வேடமிட்டு ஆடும் ஆண்கள்.. எண்ணெய் விளக்கு ஒளியில் அற்புத நடனம்! - Seithipunal
Seithipunal


16ம் நூற்றாண்டில் தஞ்சாவூர் அருகில் உள்ள மெலட்டூரைச் சுற்றியுள்ள சாலியமங்கலம், ஊத்துக்காடு, தேப்பெருமாநல்லூர் உள்ளிட்ட பல கிராமங்களில் நரசிம்ம ஜெயந்தியின்போது பாகவத மேளா என்னும் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. அக்காலத்தில் ஊர் மக்களிடையே பக்தியையும், ஒற்றுமையையும் வளர்க்கும் பொருட்டு இந்தக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், காலப்போக்கில் இக்கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது குறைந்து தற்போது மெலட்டூர் மற்றும் சாலியமங்கலம் ஆகிய ஊர்களில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சியில் ப்ரஹலாத சரித்திரம், அரிச்சந்திரா, மார்கண்டேயர், உஷா பரிணயம், கம்சவதம், ஹரிலீலாவிலாசம், சதிசாவித்திரி உள்ளிட்ட 12 நாடகங்கள் நடத்தப்பட்டு வந்தன.

இதற்கான கதை, வசனம் எழுதி மெலட்டூரைச் சேர்ந்த வெங்கட்ராம சாஸ்திரிகள் இந்நாடகங்களை இயக்கி வந்தார். இப்புராணக் கதை நாடகங்கள் முழுக்க முழுக்க தெலுங்கு மொழியில் தான் நடத்தப்படும். மேலும் பாகவதமேளா விழா நடக்கும் காலங்களில் மெலட்டூரைச் சேர்ந்தவர்கள் எந்த ஊரில் இருந்தாலும் இங்கு வந்துவிடுவர்.

மெலட்டூர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீ நல்லி கலையரங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த பாகவத மேளா நிகழ்ச்சிகள் எண்ணெய் விளக்கொளியில் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் சிறப்பு என்னவென்றால். பெண் வேடங்களில் ஆண்கள் தான் விரதமிருந்து பெண் வேடமிட்டு நடிப்பார்கள். இந்நிலையில் இந்த ஆண்டின் பாகவத மேளா நிகழ்ச்சியில் ப்ரஹலாத சரித்திரம் நாடகமாக நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gents dancing in ladies getup in melatur bhagavatha mela program


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->