''கண்ணகி கோயில்'' நமது தமிழர் உரிமை!! வரலாறு தெரியாத ஆட்சியாளர்கள்!! பறிபோகும் தமிழன் உரிமை!!!
''கண்ணகி கோயில்'' நமது தமிழர் உரிமை!! வரலாறு தெரியாத ஆட்சியாளர்கள்!! பறிபோகும் தமிழன் உரிமை!!!
ஒவ்வொரு வருடமும், சித்ரா பௌர்மணி அன்று, தமிழக கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் லட்சக் கணக்கில் சென்று வருகின்றனர். பூம்புகாரிலே பிறந்து வளர்ந்து, கோவலனை மணம் செய்து, ஊழ்வினையால் மதுரைக்கு வந்த கண்ணகியின் கணவனாகிய கோவலன் கொல்லப் பட்டதால், கண்ணகி மதுரையை எரித்து விட்டு, அதே ஆக்ரோசத்துடன் வருஷநாடு வழியாகச் சென்று, தென் மேற்கு மலை உச்சியை அடைந்து உயிர் விட்ட உத்தமி.
அந்த சிலப்பதிகார நாயகிக்கு, சேரன் செங்குட்டுவன், மலை உச்சியல் கோயில் கட்டினான். அந்தக் கோயில் வழிபாட்டிற்காக, பாண்டிய மன்னர்கள் உட்பட ராஜராஜ சோழன் போன்றோரும், பல திருப்பணிகளைச் செய்துள்ளனர். அந்தக் கோயிலில் இன்றும் பல தமிழ்க் கல்வெட்டுகளைக் காண இயலும். அந்தக் கோயில் அமைந்துள்ள மலைக்கு கீழே, உள்ள பளியன்குடி என்ற பகுதியிலிருந்து, 6.6. கி.மீ. துாரம் வனப்பகுதியில் நடந்து சென்றால், கோயிலை அடைந்து விடலாம்.
ஆங்கிலேயர்கள், இங்கிருந்து சாலை அமைப்பதற்கான பட்டாவையும் உருவாக்கி தந்து உள்ளனர். 1976-ஆம் ஆண்டு, முதல்வராக இருந்த கருணாநிதி, கண்ணகி கோயிலுக்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கி, அந்த வேளையும் தொடர்ந்தது. எதிர்பாராத விதமாக அவரது ஆட்சி கலைந்து போனதால், அந்தப் பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அடுத்து வந்த தமிழக ஆட்சியாளர்களும், சென்டிமென்டாக, கண்ணகி கோயிலுக்கு சாலை அமைப்பதை தவிர்த்து வருகின்றனர். இந்த சூழ்நிலையைப் பயன் படுத்திக் கொண்ட, கேரள அரசு, கண்ணகி கோயிலை, தன் வசப்படுத்தி வைத்திருக்கிறது.
கண்ணகி கோயிலுக்கு அருகே, தங்களது வனத்துறை அலுவலகத்தை நிறுவி, கண்காணிப்பு கோபுரத்தையும் அமைத்து வைத்து, குமுளியிலிருந்து தனியாக 16 கி.மீ. தொலைவில் சாலையும் அமைத்திருக்கிறது. சித்ரா பௌர்ணமி அன்று ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நமக்கு அனுமதி அளிக்கிறார்கள். நேற்று நடைபெற்ற கண்ணகி திருவிழாவிற்கு குமுளிக்குச் சென்ற, ஆயிரக் கணக்கான தமிழ் பக்தர்களை சோதனை என்ற பெயரில், கேரள வனத் துறையினர் வதம் செய்திருக்கின்றனர்.
ஆறு மணி முடியும் முன்பாகவே, அங்கிருப்பவர்களை எல்லாம் விரட்டி உள்ளனர். இந்த அவலத்தைக் கண்டு தமிழர்கள், கண்ணீருடன், தங்கள் பாரம்பரிய சொத்தையும், உரிமையையும் இழந்து, அவமானத்துடன் திரும்பினர்.
இன்னும் எத்தனை காலம் இந்த அவலம்? கண் திறக்குமா தமிழக அரசு?
English Summary
Kannagi Temple Our Tamils Unknown rulers The right to get Tamil