12, 11ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள்: பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது .இதில் 12 ஆம் மாணவர்களுக்கு 22ஆம் தேதி உடனும் 11ஆம் மாணவர்களுக்கு 25ஆம் தேதி உடன் தேர்வு முடிவடைய உள்ளது. 

இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி வகுப்புகளுக்கான பொது தேர்வு வருகின்ற 26 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்நிலையில் பொது தேர்வு நிறைவு பெற்றவுடன் மாணவர்கள் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்படும். அந்த வகையில் விடைத்தாள் திருத்தும் பணி எப்போது தொடங்கப்படும் என்ற தகவலை பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

அதன்படி, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களது விடைத்தாள் அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து 13 ஆம் தேதி வரையிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களது விடைத்தாள் அடுத்த மாதம் 6 ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை திருத்தும் பணிகள் நடைபெற உள்ளது. 

இதனை தொடர்ந்து எஸ் எஸ் எல் சி வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 12ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றவுடன் மதிப்பெண்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றும் பணி தொடங்கி நடைபெறும். அதன் பிறகு பொது தேர்வு முடிவு வெளியிடபடும் என தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12th 11th class answer sheet correction work 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->