அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் - தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். 

இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலியல் பலாத்கார வழக்கையும், முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டனர்.

அத்துடன் விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளபோது, அரசு அனுமதி இன்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை காவல் ஆணையர் அருணுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், காவல் ஆணையர் அருணுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நீக்கி உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt appeals anna university harassment case in supreme court


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->