பெரியார் குறித்து அவதூறு கருத்து - சீமான் மீது 2 இடங்களில் வழக்கு பதிவு.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி காரை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், திமுக சட்டத்துறை மாநில துணை செயலாளர் மருது கணேஷ், திமுக நிர்வாகி ரகு, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, திராவிட விடுதலை கழகத்தின் மாவட்ட செயலாளர் உமாபதி உள்ளிட்டோர் தனித்தனியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதேபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவைச் சேர்ந்த நபர்களும் திராவிட கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் புகார் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நெல்லை மற்றும் மயிலாடுதுறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதாவது, பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக தி.க. நிர்வாகி வேல்முருகன் அளித்த புகார் மற்றும் மயிலாடுதுறையில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன் முதல்நிலை அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fir file 2 places against ntk leader seeman for speech about periyar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->